Total Pageviews

Friday, November 14, 2008

தியானம்

எல்லாராலும் ஏன் தியானம் செய்ய முடியவில்லை?
அதற்க்கு பல காரணங்கள் உண்டு
அவைகள் என்ன?
முதலில் தியானம் என்றால் என்ன
என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.
எதற்காக தியானம் செய்யவேண்டும்
என்பதை புரிந்துகொள்ளவேண்டும்
எதை குறித்து தியானம் செய்ய வேண்டும்
என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்
நம்முடைய உடல்நிலை, மனநிலை,
நம்முடைய அறிவின் முதிர்ச்சி நிலை குறித்து
நன்கு அறிந்து கொண்ட பின்னரே
நமக்கு ஏற்ற தியான முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்
எல்லோருக்கும் ஒரேவிதமான தியான முறை ஏற்புடையதாக இருக்காது.
தியானம் செய்வதற்கு நமது உடலும் நம் மனமும் ஒத்துழைக்க வேண்டும்
அதற்க்கு முதலில் இரண்டும் தயார் செய்யபடவேண்டும்
முதலில் மனம் அமைதியாக இருக்கவேண்டும்
மனதில் ஆசைகள் குறைவாக இருக்கவேண்டும்
ஆசைகள் அதிகமாக இருந்தால் மனம்
அதை நோக்கியே போய்க்கொண்டிருக்கும்
மனம் ஒருமைப்படாது
உடல் மற்றும் மனம் உறுதியாக இருக்கவேண்டும்
கடமைகளை ஒழுங்காக செய்து முடிக்கவேண்டும்
கடமைகளை முடிக்காமல் தியானத்தில் அமர முடியாது
அவைகள் மனதை உறுத்திக்கொண்டே இருக்கும்
மனதில் தீய சிந்தனைகள் இருக்ககூடாது
தற்பெருமை கூடாது
பிறர் மீது குறைகள் காண்பது கூடாது
பேராசை கூடாது
அனைத்தும் இறைவன் செயல்
என்று எண்ணி அமைதியாக
ஏற்றுக்கொள்ள பழகி கொள்ளவேண்டும்
மறந்து பிறருக்கு கேடு நினைதல் கூடாது
இவ்வாறெல்லாம் நம்மை தயார் செய்துகொண்டு
நல்ல குருவை நாடி அவர் பாதம் பணிந்து
வழி காட்ட வேண்டிகொண்டால் அவர் காட்டும்
தியான முறையை தேர்ந்தெடுத்து தினமும் தவறாமல்
குறிப்பிட்ட நேரத்தில்,சிறிதும் அவனம்பிக்கையின்றி
உற்சாகத்துடனும் பொறுமையுடனும்,
விடாமுயற்சியுடனும்
தியானத்தை தொடர்ந்து செய்துவந்தால்
நிச்சயம் வெற்றி உறுதி.
தியானம் என்பது மனதில்
எண்ணங்களற்ற நிலையை அடைவது
எண்ணங்கள் முழுவதும் மனதிலிருந்து
நீங்கிவிட்டால்மனமும் இல்லை
மனதின் மூலம் உணரப்படும்,காணப்படும்
உடலும் இல்லை உலகமும் இல்லை
அனைத்துக்கும் ஆதாரமான ஆன்மா மட்டுமே இருக்கும்
அதில் லயித்துவிட்டால் நம்முடைய
இயல்பான ஆனந்தமே எஞ்சி நிற்கும்
.புலன்கள் மூலம் நாம் தற்போது
அனுபவிக்கும் ஆனந்தம்
ஒரு வரையறைக்குட்பட்டது
ஆனால் ஆன்மாவின் மூலம் கிடைக்கும்
இன்பம் அளவிடமுடியாதது
அதை அனுபவிப்பவருக்கே
அது புரியும்.