Total Pageviews

Wednesday, July 21, 2010

நரகலோகம்.

நரகம்

நரகம் என்று தனியாக ஒரு உலகம் உண்டா?
புராணங்களில் பிறரை கொடுமை செய்பவர்கள்,
பாவங்கள் செய்பவர்கள் இந்த உலகத்திலிருந்து
இறந்த பின் நரக லோகத்திற்கு செய்த
பாவங்களுக்கான தண்டனைகளை
அனுபவிக்க அனுப்ப படுவார்கள் என்று சொல்லபட்டிருக்கிறது .
ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
தவறு செய்வவர்களுக்கு இவ்வுலகத்திலேயே அபராதமோ,
சிறைதண்டனையோ,தூக்கு தண்டனையோ வழங்கபட்டுவிடுகிறது.
உடல் ரீதியாக தவறு செய்பவன் தீரா நோயினால் அவதிபடுகிறான்.
மனரீதியாக தவறு செய்தவன் மன நோயாளியாக திரிகிறான் .
தவறான வழியில் சேர்த்த செல்வம் திருடர்களால்
கொள்ளை அடிக்கபடுகிறது,அல்லது அரசால் கையகபடுதபடுகிறது
அல்லது அந்த செல்வத்தை எவனாவது ஏமாற்றி ஏப்பம் விட்டுவிடுகிறான்.
எனவே அனைத்து தவறுகளுக்கும் இங்கேயே தண்டனை கிடைத்துவிடுகிறது.
நிலைமை இவ்வாறு இருக்க நரக லோகம் என்று
தனியாக இருக்க வாய்ப்பில்லை.
நர என்றால் மனிதர்கள் என்று பொருள்.
அகம் என்றால் வீடு அல்லது உலகம் என்று பொருள்
எனவே நரகலோகம் என்பது நாம் வசிக்கும் பூமிதான்
என்று பொருள் கொள்வதே சரியானது.