Total Pageviews

Thursday, November 20, 2008

அருட்ப்ரகாச வள்ளலார்

அருட்ப்ரகாச வள்ளலார் அறைக்குள் சென்று
அப்படியே மறைந்துவிட்டார்
மாணிக்கவாசக சுவாமிகள் கோயில்
கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டார்
ஆண்டாள் அரங்கனுடன் மக்கள் கண்ணெதிரே
அரங்கனுடன் கலந்து மறைந்துவிட்டாள்.
இந்த செய்திகளை பக்தர்கள் காலம் காலமாக
கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
ஆனால் அது எப்படி நடந்தது என்று
தீவிரமாக ஆராய்ச்சி செய்யவில்லை.
அவர்களால் முடியும்போது நம்மால் மட்டும்
ஏன் முடியாது என்று சிந்திப்பதில்லை
இதில் ஒரு வியக்கத்தக்க உண்மை
என்னவென்றால் ஒவ்வொருவரும் அவர்கள்
அறியாமலே அந்த நிலையை தினமும்
அடைந்துகொண்டிருக்கின்றனர்
எப்படி?
தினமும் தற்காலிகமாக உறக்கத்தில் ஆழும்போது
தங்கள் உடலை,மனதை, இந்த உலகத்தை
உணர்ச்சிகளை, எண்ணங்களை மறந்து
மறைந்து போகின்றனர்.
உறக்கத்திலிருந்து விழிக்கும்போது
அனைத்தும் காட்சிக்கு,நினைவுக்கு
வந்துவிடுகின்றன
இது எப்படி ?
உறக்கத்தில் மட்டும் ஏன் அனைத்தும்
மறைந்து போகின்றன?
எங்கு மறைந்துபோகின்றன?
பிறகு எங்கிருந்து அனைத்தும் வருகின்றன?
அதை தினமும் , நாம் உணராமல்
செய்து கொண்டிருக்கிறோம்
மேலே குறிப்பிட்ட அருளாளர்கள் அதை
உணர்ந்து செய்துள்ளார்கள்
தற்காலிகமாக நாம் உறக்கத்தில் அடையும்
எண்ணங்களில்லா தன்மையை விழித்திருக்கும்
நிலையிலும் அடைவதற்குதொடர்ந்து முயற்சி செய்தால்
நாமும் அருளாளர்கள் அடைந்த நிலையை
நிச்சயமாக அடைய முடியும்

Friday, November 14, 2008

தியானம்

எல்லாராலும் ஏன் தியானம் செய்ய முடியவில்லை?
அதற்க்கு பல காரணங்கள் உண்டு
அவைகள் என்ன?
முதலில் தியானம் என்றால் என்ன
என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.
எதற்காக தியானம் செய்யவேண்டும்
என்பதை புரிந்துகொள்ளவேண்டும்
எதை குறித்து தியானம் செய்ய வேண்டும்
என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்
நம்முடைய உடல்நிலை, மனநிலை,
நம்முடைய அறிவின் முதிர்ச்சி நிலை குறித்து
நன்கு அறிந்து கொண்ட பின்னரே
நமக்கு ஏற்ற தியான முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்
எல்லோருக்கும் ஒரேவிதமான தியான முறை ஏற்புடையதாக இருக்காது.
தியானம் செய்வதற்கு நமது உடலும் நம் மனமும் ஒத்துழைக்க வேண்டும்
அதற்க்கு முதலில் இரண்டும் தயார் செய்யபடவேண்டும்
முதலில் மனம் அமைதியாக இருக்கவேண்டும்
மனதில் ஆசைகள் குறைவாக இருக்கவேண்டும்
ஆசைகள் அதிகமாக இருந்தால் மனம்
அதை நோக்கியே போய்க்கொண்டிருக்கும்
மனம் ஒருமைப்படாது
உடல் மற்றும் மனம் உறுதியாக இருக்கவேண்டும்
கடமைகளை ஒழுங்காக செய்து முடிக்கவேண்டும்
கடமைகளை முடிக்காமல் தியானத்தில் அமர முடியாது
அவைகள் மனதை உறுத்திக்கொண்டே இருக்கும்
மனதில் தீய சிந்தனைகள் இருக்ககூடாது
தற்பெருமை கூடாது
பிறர் மீது குறைகள் காண்பது கூடாது
பேராசை கூடாது
அனைத்தும் இறைவன் செயல்
என்று எண்ணி அமைதியாக
ஏற்றுக்கொள்ள பழகி கொள்ளவேண்டும்
மறந்து பிறருக்கு கேடு நினைதல் கூடாது
இவ்வாறெல்லாம் நம்மை தயார் செய்துகொண்டு
நல்ல குருவை நாடி அவர் பாதம் பணிந்து
வழி காட்ட வேண்டிகொண்டால் அவர் காட்டும்
தியான முறையை தேர்ந்தெடுத்து தினமும் தவறாமல்
குறிப்பிட்ட நேரத்தில்,சிறிதும் அவனம்பிக்கையின்றி
உற்சாகத்துடனும் பொறுமையுடனும்,
விடாமுயற்சியுடனும்
தியானத்தை தொடர்ந்து செய்துவந்தால்
நிச்சயம் வெற்றி உறுதி.
தியானம் என்பது மனதில்
எண்ணங்களற்ற நிலையை அடைவது
எண்ணங்கள் முழுவதும் மனதிலிருந்து
நீங்கிவிட்டால்மனமும் இல்லை
மனதின் மூலம் உணரப்படும்,காணப்படும்
உடலும் இல்லை உலகமும் இல்லை
அனைத்துக்கும் ஆதாரமான ஆன்மா மட்டுமே இருக்கும்
அதில் லயித்துவிட்டால் நம்முடைய
இயல்பான ஆனந்தமே எஞ்சி நிற்கும்
.புலன்கள் மூலம் நாம் தற்போது
அனுபவிக்கும் ஆனந்தம்
ஒரு வரையறைக்குட்பட்டது
ஆனால் ஆன்மாவின் மூலம் கிடைக்கும்
இன்பம் அளவிடமுடியாதது
அதை அனுபவிப்பவருக்கே
அது புரியும்.


Tuesday, November 11, 2008

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறாரா?
கடவுள் இருக்கிறார்

கடவுள் எங்கே இருக்கிறார்?
கடவுள் எல்லாவிடத்திலும் எல்லா பொருளிலும் இருக்கிறார்.
ஏன் உன் உள்ளேயும் இருக்கிறார் என் உள்ளேயும் இருக்கிறார்

என் உள்ளே என்றால்?
உன் உடலின் உள்ளே உள்ளத்தில் குடி கொண்டு உன்னை இயக்குகின்றார்
அதனால்தான் உள்ளமே கோயில் ஊனுடம்பே ஆலயம் என்று
சித்தர்கள் பாடி வைத்துள்ளனர்.உள்ளம் என்னும்
கோயிலில் தெய்வம் குடியிருந்து நம்மை ஆட்டி வைக்கிறது.

அதை என் நாம் உணரவில்லை?
அதற்க்கு முயற்சி செய்யவில்லை
முயற்சி செய்யாமல் எந்த செயலும் வெற்றி பெறுவதில்லை.

அதற்க்கு என்ன செய்ய வேண்டும்?
கடமாகிய இந்த உடலை கடந்து உள்ளே செல்ல வேண்டும்

எப்படி உள்ளே செல்வது?
விழித்திருக்கும் நேரமெல்லாம் மனம் வெளியிலேயே
சென்று கொண்டிருக்கிறது
அதை உட்புறமாக திருப்ப வேண்டும்

எப்படி திருப்புவது ?
அதற்க்கு இரண்டு பற்றுகளை விட்டுவிடவேண்டும்
அவைகளை விட்டுவிட்டால் மனம் உட்புறம் தானாகவே திரும்பிவிடும்

அந்த இரண்டும் என்ன?
ஒன்று தான் என்னும் அகப்பற்று

மற்றொன்று?
எனது என்னும் புறப்பற்று

நான் என்றால் என்ன?
நான் என்னும் எண்ணம் தான் எல்லா துன்பங்களுக்கும் மூலகாரணம்

எப்படி?
நம்மையும் எல்லாவற்றையும் படைத்து காத்து,அழிக்க வேண்டிய நேரத்தில் அழித்து,மறைத்து மீண்டும் படைப்பவர் கடவுள். படைப்பது மட்டுமல்லாமல் உள்ளிருந்து இயக்குபவரும் அவரே. உண்மை இவ்வாறிருக்கையில் தான் எல்லாவற்றையும் செய்வதாக எண்ணிக்கொண்டு கடவுளை மறந்து ஆணவம் கொண்டு செயல்படுவதே நான் என்னும் எண்ணமாகும் .அந்த எண்ணத்தை கைவிடும்வரை கடவுளை உணரவும் முடியாது ,காணவும் முடியாது.
அதே போன்று இந்த உலகில் நமக்கு சொந்தம் என்று எதுவுமில்லை. இறைவன் கொடுத்த இந்த உடலும் அழிந்துவிடும் .இந்த உலகில் இருக்கும் வரை நாம் அனைத்தையும் நமக்கு தேவைப்பட்ட அளவிற்கு பயன்படுத்தி கொள்ளலாமே தவிர அவைகளுக்கு உரிமை கொண்டாடுவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை.எனவே இந்த இரண்டு பற்றுகளையும் அடியோடு விட்டோழித்தால்தான் நாம் கடவுளை காணமுடியும்.உள்ளத்தில் பற்றுகள் இருந்தால் மனம் அதிலேயேதான் லயித்திருக்கும்.பற்றுகளை கொண்ட மனத்தினால் அவைகளை விட்டுவிட்டு உள்ளத்தில் உள்ளே ஒளி வீசி கொண்டிருக்கும் கடவுளை நினைக்க கூட முடியாது. நினைக்ககூட முடியாத ஒன்றை நாம் எவ்வாறு காணுவது?

இந்த இரண்டு பற்றுகளை விட்டொழித்த பின்னர் புதிதாக இரண்டு பற்றுகளை நாம் ஏற்படுத்திகொள்ளவேண்டும்

என்ன?
ஒன்று பக்தி மற்றொன்று நம்பிக்கை
கடவுளுக்கு ஈடாக எதையும் கருதாமல்
கடவுளை அடைவதே தலையாய குறிக்கோளாக
கொண்டு செயல்படவேண்டும்
இரண்டாவது மனதில் சிறிது கூட
சஞ்சலமில்லாமல்,உறுதியான சிந்தனையுடன்
எந்தவிதமான குறுக்கீடுகள் வந்தாலும் அவைகளை
கண்டு முயற்சிகளை கை விடாமல் கடவுளை காண
முயற்சி செய்ய வேண்டும்.
இவைகளை கடைபிடித்தால்
ஒவ்வொருவரும் தன் உள்ளத்திலே கடவுளைகாணலாம்.
உள்ளத்தில் கடவுளை கண்டவர்கள்
அனைவரின் உள்ளத்திலேயும்
கடவுள் வீற்றிருப்பதை காணலாம்.
கண்டு ஆனந்தித்து துன்பமில்லா வாழ்வை இவ்வுலகத்திலும்
முடிவில் பிறப்பு ,இறப்பற்ற பேரானந்த நிலையினை அடையலாம்.

Monday, November 10, 2008

இறைவனுக்கு தன்னை காத்து கொள்ள தெரியும்.

நம்மை படைத்து காக்கும் இறைவனிடம்
தன்னை காக்க வேண்டும்
என்று தினமும் வழிபாடு செய்பவர்களே
நீங்கள் அவன் உறையும் கோயில்களை
காப்பாற்ற அடிதடிகளில் ஈடுபடுவது ஏனோ ?
நம்மை உறங்கும்போது கூட
கண்விழித்து காப்பாற்றும் இறைவனுக்கு
தான் உறையும் கோயில்களை
காப்பாற்றிக்கொள்ள தெரியாதா ?
என்ற நம்பிக்கை உங்களுக்கு
ஏன் ஏற்படவில்லை?
நம்பிக்கையற்ற வழிபாட்டால்
பயனேதும் இல்லை
நம்பிக்கை கொள்வீர்
நலமாக வாழ்வீர் .

கருத்து சுதந்திரமும் இறைவனும்

கருத்து சுதந்திரம் உள்ள இவ்வுலகில்
இறைவன் உண்டு என்பவருக்கும்
இறைவன் இல்லை என்பவருக்கும் இடமுண்டு
இவர்களுக்கு இடையே நடக்கும் பூசல்களுக்கும்
போராட்டங்களுக்கும் இறைவனுக்கும் தொடர்பில்லை
அவன் மனிதர்களை படைத்துவிட்டு அவர்களை
இயங்க வைக்கும் பணியோடு ஒதுங்கிவிடுகிறான்

இறைவனும் இயற்கையும்

ஆத்திகர்கள் தங்கள் சக்திக்கு
அப்பாற்பட்டதை இறைவன் என்கிறார்கள்
ஆனால் நாத்திகர்கள் அதற்கு இயற்கை என்று
பெயர் சூட்டியுள்ளார்கள்
எந்த பெயரிட்டு அழைத்தாலும்
உண்மை என்னவோ ஒன்றுதான்

பெரியார் சிலை வைத்தால் ஏன் பதறுகிறீர்கள்?

பெரியார் சிலை வைத்தால் ஏன் பதறுகிறீர்கள் ?;
சிலைகளால் என்ன செய்ய முடியும்
நீர் கொண்ட கொள்கைகளில்
உறுதியாக இருந்தால்
எனவே சிந்திப்பீர்
அழிவு செயல்களில் ஈடுபடும்
எண்ணங்களை விட்டோழிப்பீர்

பெரியார் சிலைகளாகட்டும்
பெருமாள் சிலைகளாகட்டும்
அவைகள் ஒன்றும் செய்வதில்லை
அவைகளை வைத்த இடத்தில்
அப்படியே இருக்கின்றன
அதை வைப்பவர்கள்தான்
அடித்துகொள்கிறார்கள்
அவரவர் கொள்கைகளை
நிலை நாட்டும் பொருட்டு

சிலைகள் சிலையாய் இருக்கும்போது
தோன்றாத பிரச்சினைகள்
அதை உடைக்கும்போது மட்டும்
தோன்றுவது ஏனோ ?
அச்செயல் அதை வைத்தவர்களின்
உணர்வுகளை பாதிப்பதினால்தான்