Total Pageviews

Tuesday, May 19, 2009

சுவாமி சிவானந்தரின் பிரார்த்தனை

பூசிக்கத்தக்க புண்ணியமூர்த்தியே
உயிர்கள் அனைத்திலும் உறைபவனே
உனக்கு பலகோடி வணக்கங்கள்
இறைவா நீ இவ்வுலகத்தின் எல்லா பொருள்களிடத்தும் நீக்கமற நிறைந்துள்ளாய்
இதயத்திலும், மனத்திலும்,புலன்களிலும் ,பிராணன்களிலும் பஞ்சபூதங்களிலும் இடம் பெற்றுள்ளாய் .வலப்புரத்திலே ,இடப்புறத்திலே பின்புறத்திலே,மேற்ப்புரத்திலே
கீழ்புரத்திலே உள்ள எல்லா உயிர்களிடத்தும் நீ விளங்குகிறாய்
என் குருதேவர் வடிவிலும், இவ்வுலகில் உள்ள கண்ணுக்குத் தோன்றும்,
தோன்றா பொருட்கள் அனைத்திலும் நீ அவதாரம் செய்கிறாய்.
காருண்ய மூர்த்தியே,உனக்கும், உன் வண்ண தோற்றங்கள் அனைத்திற்கும் பணிபுரிய உடல்நலமும் பலமும்,,கொண்ட இன்னுமொரு நாளை நீ அளித்துள்ளாய்
ஆகவே நான் என்றும் நன்றி உள்ளவனாயும் , கடமைப்பட்டவனாகவும் இருப்பேன்.
மனித குலத்திற்கு சேவை செய்வதன் மூலம் என்னைப் புனிதப்படுத்திகொள்ள அரியதொரு வாய்ப்பை நீ எனக்கு அளித்துள்ளாய்
நடத்தையிலே கண்ணியமும் பணிவும், மரியாதையும் கொண்டவனாய்
திகழ்வேனாக!
இன்றும், என்றும்,பிறர் மனம் புண்படும்படியோ கோப உணர்ச்சிக்கு ஆளாகும்படியோ என் எண்ணமோ செயலோ அமையக்கூடாது
இரக்கமே உருவான இறைவா!என்னிடத்தில் உள்ள குற்றங்குறைகள் யாவும் என்னை விட்டு நீங்கட்டும் .
பிரம்மச்சரியம் அஹிம்சை சத்தியம் ஆகிய விரதங்களில்
நான் சிறிதும் தவறாது நிலை பெற்று இருப்பேனாக.
என் இறுதி காலம் வரை கடவுட்பாதையில் நடந்து செல்வேனாக.
என் மனசாட்சிக்கு உண்மையாக பணி புரிவேனாக.
நான் தர்மத்தின் வழி நிர்ப்பேனாக
என் வாழ்வு முடியும்வரை தெய்வ சிந்தனை உடையவர்களின்
கூட்டுறவோடு இருப்பேனாக
.நான் உன்னை நினைக்காத நேரமில்லை.
நான் நினைப்பதெல்லாம் ஒவ்வொருவரது முகத்திலும் நீயாக காட்சியளிக்கவேண்டும்.வேறென்ன வேண்டும்? அய்யனே!
இதனைப்பெற நீ எனக்கு அருள் புரிதல் வேண்டும் ,
பொய்மையினின்றும் உண்மைக்கும் ,இருளிலிருந்து ஒளிக்கும்
அழியும் தன்மையினின்று அழியாதன்மைக்கும் எனக்கு நீ வழி காட்டுவாயாக
மீண்டும் மீண்டும் உனக்கு என் அன்பு வணக்கங்கள் உரித்தாகுக
காக்கும் கருணாகரனே ! தாழ்வுற்றோரைத் தாங்கும் தயாபரனே !
என் னைக் காப்பாற்று !கரை சேர எனக்கு வழிகாட்டு !அருளொளி கொடு .
நாமெல்லோரும் இன்புற்றிருப்போமாக
தொல்லையிலிருந்தும் , துன்பத்திலிருந்தும் விடுபடுவோமாக !
உலகெங்கும் நீங்கா அமைதியும் அன்பும் நிலவட்டும் !
வாழ்விலே வளம் சுரக்க நலம் செழிக்க , நாமெல்லோரும் நட்புணர்வோடும் ,தியாக உணர்வோடும் ,ஒன்றுபட்டு உழைப்போமாக !
நம் இதயங்கள் இணைந்து வாழட்டும்
நமது நோக்கம் பொதுவாக இருக்கட்டும் .
ஓம் அமைதி . அமைதி . அமைதி .

No comments: