Total Pageviews

Wednesday, July 21, 2010

நரகலோகம்.

நரகம்

நரகம் என்று தனியாக ஒரு உலகம் உண்டா?
புராணங்களில் பிறரை கொடுமை செய்பவர்கள்,
பாவங்கள் செய்பவர்கள் இந்த உலகத்திலிருந்து
இறந்த பின் நரக லோகத்திற்கு செய்த
பாவங்களுக்கான தண்டனைகளை
அனுபவிக்க அனுப்ப படுவார்கள் என்று சொல்லபட்டிருக்கிறது .
ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
தவறு செய்வவர்களுக்கு இவ்வுலகத்திலேயே அபராதமோ,
சிறைதண்டனையோ,தூக்கு தண்டனையோ வழங்கபட்டுவிடுகிறது.
உடல் ரீதியாக தவறு செய்பவன் தீரா நோயினால் அவதிபடுகிறான்.
மனரீதியாக தவறு செய்தவன் மன நோயாளியாக திரிகிறான் .
தவறான வழியில் சேர்த்த செல்வம் திருடர்களால்
கொள்ளை அடிக்கபடுகிறது,அல்லது அரசால் கையகபடுதபடுகிறது
அல்லது அந்த செல்வத்தை எவனாவது ஏமாற்றி ஏப்பம் விட்டுவிடுகிறான்.
எனவே அனைத்து தவறுகளுக்கும் இங்கேயே தண்டனை கிடைத்துவிடுகிறது.
நிலைமை இவ்வாறு இருக்க நரக லோகம் என்று
தனியாக இருக்க வாய்ப்பில்லை.
நர என்றால் மனிதர்கள் என்று பொருள்.
அகம் என்றால் வீடு அல்லது உலகம் என்று பொருள்
எனவே நரகலோகம் என்பது நாம் வசிக்கும் பூமிதான்
என்று பொருள் கொள்வதே சரியானது.

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆம் பூமிதான் சொர்க்கமும் நரகமும்.நல்லது செய்யின் நாம் வாழும் வாழ்வே சொர்க்கம். அல்லது செய்யின் நமது வாழ்வே நரகம்

நெல்லைத்தமிழன் said...

எதேச்சையாக இந்தப் பதிவுக்கு வந்தேன். உங்கள் கருத்து வித்தியாசம் ஆனால் ஏற்றுக்கொள்ள இயலாது.

பழைய புண்ணிய கர்மாக்களை அனுபவிப்பது போலவே அந்தச் சூட்டிலேயே பாவங்களுக்கான பலன்களைக் கொடுத்து நம்மை அவற்றையும் குறைக்க வழி செய்கிறான். இந்த ஜென்மாவில் பாவங்களை மிகவும் குறைத்து புண்ணியத்தை மிக அதிகப்படுத்துவது நம் கையில்தான் இருக்கிறது. துரதிருஷ்ட வசமாக, இந்தப் புரிதல் பலருக்கு உரிய காலத்தில் வருவதில்லை. (அதை மாயை என்று சொல்லிடறாங்க).

உல்கள் கருத்தை நோக்கினால் உங்களுக்குத் தெரிந்தவர்களிடமே அது பொருந்தாத்தைக் காணலாம்.

Ramesh DGI said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Income Tax Auditor in Chennai | Income Tax Auditors in Chennai | Income Tax Filing Consultant in Chennai | Income Tax registration in Chennai | Income Tax returns in Chennai | LLP Registration in Chennai | MSME Consultant in Chennai | One Person Company Registration | One Person Company Registration in Chennai | Partnership Firm Registration | Partnership Firm Registration in Chennai | Private limited Consultant in Chennai | Private Limited Company Registration | Private Limited Company Registration in Chennai | Proprietorship Company Registration | ROC registration Consultants in Chennai | Sales Tax Auditors in Chennai | Sales Tax Consultant in Chennai | Service Tax Consultant in Chennai | Tax Consultant in Chennai | TDS Refund Consultant in Chennai | TIN number in Chennai